100% வாக்களிப்பதின் அவசியத்தை மரக்கன்றுகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்.
100% வாக்களிப்பதின் அவசியத்தை மரக்கன்றுகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்.
வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்திய அரசு பள்ளி மாணவர்கள். திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த கோழிப்புலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்கான அவசியத்தை வலியுறுத்தி பள்ளியில் பயிலும் சாரண சாரணிய மாணவர்களின் வாயிலாக பொதுமக்களுக்கும் பெற்றோர்களுக்கும் மரக்கன்றுகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
விழிப்புணர்வில் அனைவரும் வாக்களிக்க வேண்டிய அவசியத்தையும் நோட்டுக்கு வாக்களிக்க கூடாது என்பதை வலியுறுத்தியும் துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கும் பெற்றோர்களுக்கும் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி பள்ளி சாரண ஆசிரியர் முரளி, ஆசிரியர்கள் ஜெகராஜ், ஆனந்தி, விமலி ஆகியோர் கலந்து கொண்டு விழிப்புணர்வுக்கு ஊக்கப்படுத்தினர்.