100% வாக்குப்பதிவை வலியுறுத்தி அரக்கோணம் ரயில் நிலையத்தில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
100% வாக்குப்பதிவை வலியுறுத்தி அரக்கோணம் ரயில் நிலையத்தில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற பொது தேர்தலில் அரக்கோணம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்பதை வலியுறுத்தி தேர்தல் அதிகாரிகள் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர் . அதன் தொடர்ச்சியாக அரக்கோணம் ரயில் நிலையத்தில் வருவாய் கோட்டாட்சியர் பாத்திமா தலைமையில், டாக்டர் வி.ஜி. என் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்.
மேலும் வாக்களிப்பதன் அவசியம், வாக்கின் வலிமை உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளுடன் அரசு அதிகாரிகள் , பள்ளி மாணவ ,மாணவிகள் ரயில்வே போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியில் அரக்கோணம் விஜிஎன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் தனபால், செயலாளர் ஜி டி என் அசோகன் , துணை சேர்மன் எத்திராஜ், பொருளாளர் சரவணன், இணை செயலாளர் முரளி, பள்ளி முதல்வர் வனிதா, தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் சரஸ்வதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.