12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களின் உயர் கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி
மாணவர்களை மலர்களை வழங்கி வரவேற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர்கள்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி நடைபெற்றது முன்னதாக குத்துவிளக்கேற்றி துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து வந்த மாணவர்களை மலர்களை வழங்கி ஆதி திராவிட நலத்துறை வட்டாட்சியர் காதர் முகைதீன் வரவேற்றார் பின்னர் மேடையில் பேசிய முதன்மை கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் நான் பிறக்கும் போது வாய்,உதடு குறைபாடுடன் பிறந்து ஆறு மாதத்தில் ஒரு அறுவை சிகிச்சையும்,இரண்டு வருடத்தில் ஒரு அறுவை சிகிச்சை செய்ததாகவும் பின்னர் பள்ளி கல்லூரிகளில் பயிலும் போது ,உச்சரிப்பு, பிழையுடன் பேசுவதால் என்னை பார்த்து பலர் சிரித்தனர் ஆனால் தற்போது முயற்சியும் பயிற்சியும் மேற்கொண்டு தங்கள் முன் ஒரு வாழ்வியல் முன் உதாரணமாக உத்வேக பேச்சாளராக நிற்கிறேன் ஆகவே சின்ன சின்ன குறைபாடுகளை நினைத்து தன்னை தாழ்த்திக் கொள்ள வேண்டாம் என மாணவர்களுக்கு உத்வேகத்தை அளித்தார் அதனை தொடர்ந்து பேசிய தாட்கோ மேலாளர் தியாகராஜன் கல்வி உதவித்தொகை, கல்வி கடன், எவ்வாறு பெறுவது குறித்த ஆலோசனைகளை மாணவர்களுக்கு வழங்கினார் இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு,பரமக்குடி வட்டாட்சியர் சாந்தி உள்ளிட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர் இதில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்