BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தமிழ் புத்தாண்டு மற்றும் குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு திருநெடுங்களநாதர் கோவில் நவகிரக குரு பகவானுக்கும், யோக தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை.

இன்று குரு பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம் பெறுவதை முன்னிட்டு ஆலயங்களில் குருபகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே உள்ள திருநெடுங்களநாதர் கோவிலில் இன்று அதிகாலை நவகிரக குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அப்போது சந்தனம் பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், விபூதி திரவிய பொடி உள்ளிட்ட ஒன்பது வகையான அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது.

 


பின்னர் ஆலயத்தில் அமைந்துள்ள யோக தட்சிணாமூர்த்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 

 


இந்த சிறப்பு பூஜையை கோயில் செயல் அலுவலர் வெற்றிவேல் முன்னிலையில் சோமசுந்தரம் சிவாச்சாரியார், ரவி மற்றும் ரமேஷ் சிவாச்சாரியார்கள் செய்தனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )