மாவட்ட செய்திகள்
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை பலி மருத்துவமனையை முற்றுகையிட்டு சாலைமறியல்:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா காரைமேடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் கூலி தொழிலாளி. இவரது மனைவி பிரனீபாவுக்கு தலைபிரசவம் என்பதால் பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவனைக்கு 9ம்தேதி அழைத்து வந்துள்ளார். குழந்தை நல்ல நிலையில் உள்ளதாகவும் இருதினங்களுக்குள் சுகபிரசவம் ஆகும் என்று கூறி மருத்துவனையில் அனுமதித்துள்ளனர். இன்று மாலை வரை நன்றாக இருந்தவருக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது. அங்கு இருந்த செவிலியர்கள் பாராசிட்டமல் மாத்திரை சாப்பிடும்படி கூறியதாகவும், பணியில் இருந்த மருத்துவர் பரிசோதனை செய்துவிட்டு பிரஷர் அதிகமாக உள்ளதாகவும் குழந்தை திரும்பியுள்ளதால் உடனடியாக சிசேரியன் செய்ய வேண்டும். மேலும் தாய் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று கூறியுள்ளார் பின்பு அறுவைசிகிச்சை செய்துள்ளனர்.

பிரனீபாவுக்கு பிரஷர் உள்ளதை ஏன் சோதனை செய்யவில்லை என்று பயிற்சி செவிலியர்களை மருத்துவர் திட்டியதாகவும் குற்றம்சாட்டிய உறவினர்கள் குழந்தை இறப்பிற்கு மருத்துவமனையே பொறுப்பேற்க வேண்டும் என்று கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து இறந்த குழந்தையை தூக்கிகொண்டு மயிலாடுதுறை கும்பகோணம் சாலையில் உறவினர்கள் மற்றம் விடுதலைசிறுத்தைகள் கட்சியினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் குவிக்கப்பட்டனர். 2மணிநேரத்திற்கு மேலாக சாலைமறியல் போராட்டம் நீடித்தது. மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி, தலைமை மருத்துவர் ராஜசேகர் டிஎஸ்பிக்கள் வசந்தராஜ், லாமேக் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில் நாகையிலிருந்து மருத்துவகுழுவினர் மூலம் மருத்துவசிகிச்சை குறித்து விசாரணை செய்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

குழந்தையை காப்பாற்றமுடியவில்லை என மருத்துவர்கள் கூறியுள்ளானர். குழந்தை இறப்பிற்கு பயிற்சி செவிலியர்களின் அலட்சியமே காரணம்
அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததன் பேரில் கலைந்து சென்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
