மாவட்ட செய்திகள்
கோவில்பட்டி அருகே ஸ்ரீ வெயிலுகந்தம்மன் திருக்கோயில் சித்திரைப் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயத்தை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே துரையூர் அருள்மிகு ஸ்ரீ வெயிலுகந்தம்மன் திருக்கோயில் சித்திரைப் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.

முதலில் நடந்த பெரிய மாட்டு வண்டி போட்டிக்கு 10 மைல் தூரம் நிர்ணயிக்கப்பட்டது. இதில் 5 வண்டிகள் கலந்து கொண்டன. போட்டியை முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கொடியசைத்து தொடங்கி வைத்தார். பெரிய மாட்டு வண்டி போட்டியில் மஞ்சநாயக்கன்பட்டி மாட்டுவண்டி முதல் பரிசான 25,001-ம் பெற்றது. 2-வது இடத்துக்கு வந்த சிவஞானபுரம் மாட்டு வண்டிக்கு 23,001-ம், 3-வது இடத்துக்கு வந்த தொட்டாம்பட்டி மாட்டு வண்டிக்கு 21,001-ம் பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து நடந்த சிறிய மாட்டு வண்டி போட்டியின் பதினோரு மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதற்கு ஆறு மைல் தூரம் நிர்ணயிக்கப்பட்டது. கச்சேரி தளவாய்புரம் மாட்டுவண்டி முதலிடம் பிடித்து 20,001 பரிசு பெற்றது. 2-ம் இடம் பிடித்த சீவலப்பேரி வண்டிக்கு 18,001-ம், 3-வது இடம்பிடித்த கடம்பூர் மாட்டு வண்டிக்கு 16,001-ம் பரிசு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளர்கள் அய்யாத்துரை பாண்டியன், அன்புராஜ், வண்டானம் கருப்பசாமி, இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் துறையூர் கணேசன், மதிமுக மத்திய பகுதி ஒன்றிய செயலாளர் சரவணன்,அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் சாமிராஜ், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி, உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
