2 புரோக்கர்களை கையில் வைத்துக் கொண்டு பணத்தை வாரி குவிக்கும் வண்டறந்தாங்கல் விஏஓ நிவேதாகுமாரி.ஐக்

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா வண்டறந்தாங்கல் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிபவர் நிவேதா குமாரி. இவர் என்றைக்கு வண்டறந் தாங்கல் விஏஓவாக பணியேற்ராறோ அன்று முதல் சிசிடிவி கேமராவை பொருத்தி பணிபுரிந்து வருகிறார்.
இவர் கரசமங்கலத்தில் பணிபுரிந்த போது பட்டா, சிட்டா மாற்ற ரூ.20 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை வாங்கி குவித்துள்ளார் என்ற தகவல் வந்த வண்ணம் உள்ளது. இதனால் ஊராட்சி மன்ற தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது
தந்தை தயாநிதி ஆகியோர் கடுமையாக வருவாய்த் துறையில் போராடி நிவேதா குமாரி மற்றும் இவருக்கு கிராம உதவியாளராக பணியாற்றிய கீதா இருவரையும் காட்பாடிக்கு பணியிட மாற்றம் செய்தனர்.
இதில் கீதா பழைய காட்பாடிக்கும் நிவேதா குமாரி வண்டறந்தாங்கலுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். வண்டறந்தாங்கலுக்கு வந்தவுடன் ரூபாய் 1000 உதவித்தொகை பெறுவதற்கு தகுதியுள்ள பயனாளிகளுக்கு தராமல் அதை ரிஜெக்ட் செய்து விட்டு யார் பணம் தருகிறார்களோ அவர்களுக்கு இந்த முதியோர் உதவித்தொகை பெற தகுதி உள்ளவர்கள் என்று சான்றிதழ் கொடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக யார் அங்கு சென்று கேள்வி கேட்டாலும் அவர்களை மரியாதை இல்லாமல் பேசுவது அவர்களை விரட்டி அடிப்பது என்று இவர் விருப்பம் போல் பணியாற்றி வருகிறார்.
குறிப்பாக தாசில்தார் ஜெகதீஸ்வரன் தான் இப்படி பணியாற்ற சொன்னார் என்று அவர் மீது பழியை போட்டுவிட்டு இவர் ஏதோ நல்லவர் போல வெளியில் காட்டிக் கொண்டு பணத்தை மட்டுமே வசூல் செய்து கொண்டு பணத்தை சேமிப்பதிலேயே இருக்கிறார்,
தொடர்ந்து இருந்தும் வருகிறார். தற்போது இப்படி பணத்தை வாங்குவதற்காகவே இல்லாததை சொல்லி கிராம உதவியாளர் லோகு என்பவரை மாற்றிவிட்டு கீதாவையே தனக்கு கிராம உதவியாளராக பணியமர்த்த கோரி தாசில்தார் ஜெகதீஸ்வரனிடம் கூறி அவரை இவர் அழைத்துக் கொண்டு தனக்கு துணைக்கு வைத்துக் கொண்டுள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
குறிப்பாக தலைவர் மற்றும் பொதுமக்கள் எந்த ஒரு பணியாக இவரை நாடி வந்தாலும் எதிரில் ஜெராக்ஸ் கடை வைத்துள்ள சுதாகரை சென்று பார்க்குமாறு கூறி அனுப்பி வைக்கிறார்.
அத்துடன் சிட்டா, பட்டா மாற்ற வேண்டுமென்றால் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் நவீன் என்பவரை சென்று பார்க்குமாறு இவரே அனுப்பி வைப்பதாகவும் ஒரு தகவல் உலா வருகிறது.
குறிப்பாக இந்த ஜெராக்ஸ் கடை சுதாகர் மற்றும் நவீன் ஆகியோர் புரோக்கர்களாக செயல்படுவதாகவும் இந்த ஊரில் உள்ள கிராம பொதுமக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்த தகவல் தாசில்தாருக்கு தெரியுமா? தெரியாதா? என்று தெரியவில்லை.
குறிப்பாக வீர கோயில் தெருவில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர் உள்ளார் என்று ஜாதி சான்றிதழை இவர் பணத்தைப் பெற்றுக் கொண்டு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் அவர் உண்மையிலேயே ரைஸ் மில் தெருவைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. வண்டறந்தாங்கலுக்கும், சுற்றியுள்ள ஏழு ஊர்களுக்கும் இந்த இரு புரோக்கர்கள் விஏஓவுக்கு வலது, இடது கரமாக செயல்படுவதாக பொதுமக்கள் தரப்பிலும், சமூக அலுவலர்கள் தரப்பிலும் கடுமையான புகார்கள் கூறப்படுகிறது. குறிப்பாக கூட்டுப்பட்டாவை தனிப்பட்டாவாக மாற்றுவது,
தனிப்பட்டாவை கூட்டுப்பட்டாக மாற்றுவது என்று கூறி அவர்களிடம் கணிசமான ஒரு தொகையை பறிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். குறிப்பாக யார் அந்த சார் என்று கேட்கும் அளவிற்கு நவீன் என்பவர் இங்கு புகுந்து விளையாடுவதாக கூறப்படுகிறது.
விஏஓ அலுவலகத்தில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தால் இவர்கள் இருவரும் எத்தனை முறை இந்த அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர்.
அவர்கள் அரசு ஆவணங்களை எடுத்துக் கொண்டு வெளியில் செல்வதும் அதை ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டு பிறகு மீண்டும் கொண்டு வந்து வைப்பதுமாக உள்ளனர். இப்படி இவர்களுக்கு அளவில்லாத அதிகாரத்தை கொடுத்தது யார்?. நவீன் சொன்னால்தான் எந்த பணியாக இருந்தாலும் கண்களை மூடிக்கொண்டு கையொப்பமிடுவதாகவும் பொதுமக்கள் தரப்பில் கதை கதையாக கூறப்படுகிறது.
இந்த கிராம நிர்வாக அலுவலகத்தில் மருத்துவ காப்பீடு பெற விண்ணப்ப படிவங்கள் இல்லை. எதற்கெடுத்தாலும் எதிரில் உள்ள ஜெராக்ஸ் கடைக்கு சென்று வாங்கிக் கொள்ளுங்கள் என்று பொதுமக்களை இவர் அனுப்புவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இதனால் இந்த வண்டறந்தாங்கல் கிராம நிர்வாக அலுவலரை சந்திக்க வரும் வண்டறந்தாங்கலைச் சுற்றியுள்ள ஏழு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக அலுவலகத்தை சுத்தமே செய்வதில்லை. இதனால் குப்பைக் கூலங்கள் நிரம்பி வழிய ஆரம்பித்துவிட்டது.
இப்படி அதிலேயே (குப்பையிலேயே) பணியாற்றி வருகின்றனர். அலுவலகமும் சரியான நேரத்திற்கு திறப்பதில்லையாம். இவர் பிரம்மபுரம் விஏஓ ரேகா என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சுற்றி வருவதாக கூறப்படுகிறது.
இதை பொதுமக்கள் யாராவது தட்டி கேட்டால் நான் தாசில்தாரிடம் சொல்லிக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு அவர் சென்று விடுகிறார்.
இவர் ஒரு பசுத்தோல் போர்த்திய புலியாக இங்கு வலம் வந்து கொண்டுள்ளார் என்கின்றனர் கிராம பொதுமக்கள்.
ஊராட்சி மன்ற தலைவரை கூட இவர் மதிப்பதில்லை என்றும் அவர் சொல்வதை கேட்பதில்லை என்றும் ஒரு தகவல் கூறப்படுகிறது.
இவரது செல்போனை குறிப்பாக ஆய்வு செய்தால் இதில் உள்ள உண்மை இவர் புரோக்கர்களை வைத்து வேலை செய்வது வெட்ட வெளிச்சமாக தெரியவரும் என்பது உறுதி.
வருவாய்த் துறையில் இப்படி வசூல் செய்து பொதுமக்களின் ரத்தத்தை ஸ்ட்ரா போட்டு உறிஞ்சும் வண்டறந்தாங்கல் விஏஓ நிவேதா குமாரி மீது துறை ரீதியான விசாரணையை நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக திடீர் போர்க்கொடியும் தூக்கி உள்ளனர். தங்களது ஊரைச் சேர்ந்த கிராம உதவியாளர் லோகு மாற்றப்பட்டதற்கு இதுநாள் வரை எந்த காரணமும் கூறப்படவில்லை என்கின்றனர் கிராம பொதுமக்கள்.
அத்துடன் அவர் ஒரு நாள் கூட விடுமுறை எடுத்தது கிடையாது. அப்படி பணிபுரிந்தவர் என்ன தவறு செய்தார்? என்பதும் கூறப்படவில்லை. இதனால் வண்டறந்தாங்கலில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதாகவும் தெரிய வருகிறது.
இப்படி கூறப்படும் செய்தியை திசை திருப்ப தாசில்தாரும் விஏஓவுடன் இணைந்து செயல்படுகிறாரா? என்று தெரியவில்லை.
இது ஒரு புரியாத புதிராகவும் உள்ளது .ஆக மொத்தத்தில் இந்த வண்டறந்தாங்கலுக்கு புதிய விஏஓ நியமனம் செய்ய வேண்டும் என்றும் கிராம நிர்வாக அலுவலர் உரிய பணியை செய்ய வேண்டும் என்றும் கிராம பொதுமக்கள் திடீர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
வருவாய்த்துறை உரிய விசாரணை நடத்தி வண்டறந்தாங்கலில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை நீக்கி அமைதியான சூழலை உருவாக்க வேண்டும் என்பது அனைவரது ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வருவாய்த்துறை அமைச்சர் மற்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் இந்த பகுதியில் அப்படி என்ன நடக்கிறது. என்பதை அலசி ஆராய்ந்து பார்த்து ஒரு நல்ல கிராம நிர்வாக அலுவலரை நியமிக்க வேண்டும் என்பதே அனைவரது வேண்டுகோளாக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தி ஆசிரியர் ச.வாசுதேவன்