BREAKING NEWS

200 ஏக்கர் விவசாய நிலம்,நீர் நிலைகள் மற்றும் கருவேப்பிலை – பாளையம் கிராம மக்கள் சுதந்திர காப்பற்றப்படுமா??

200 ஏக்கர் விவசாய நிலம்,நீர் நிலைகள் மற்றும் கருவேப்பிலை பாளையம் கிராம மக்கள் சுதந்திர காப்பற்றப்படுமா.

 

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள கருவேப்பிலை பாளையம் கிராம சுமார் 300 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகிறானர்.இவர்களுக்கு விவசாயம் மட்டுமே வாழ்வாதாரமாக உள்ளது இப்படி பட்ட சுழல் நிலையில் நீர் நிலைகள் மற்றும் குடியிருப்பு அருகில் பெட்ரோல் பங்க் வர இருப்பதால் அப்பகுதி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.காரணம் அப்பகுதியில் 200 ஏக்கர் விவசாய நிலத்திற்கு நீர் அவ்வழியாக செல்லாமல் விவசாயம் அழியும் நிலையும் மேலும் மழைநீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து அழிவை ஏற்படுத்தும் அவல நிலையும், அங்கு கோவில் இருப்பதால் திருவிழா காலங்களில் பட்டாசுகள் வெடிப்பால் பெட்ரோல் பங்க் தீ பற்றிக் கூடிய நிலை ஏற்படக்கூடும் என்பதாலும் பெட்ரோல் பங்க் இங்கு வர வேண்டாம் என்று அப்பகுதி மக்களும், இளைஞர்களும் மற்றும் சமூக ஆர்வலர்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.மேலும் பெட்ரோல் பங்க் வந்தால் ஊர் மக்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்தப்படும் என்று கூறுகின்றனர்.

CATEGORIES
TAGS