BREAKING NEWS

200-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டி சாய்ப்பு மர்ம நபர்கள் அட்டூழியம் பொதுமக்கள் வேதனை வெப்படை காவல் நிலையத்தில் புகார் மரங்களை வெட்டிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை.

200-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டி சாய்ப்பு மர்ம நபர்கள் அட்டூழியம் பொதுமக்கள் வேதனை வெப்படை காவல் நிலையத்தில் புகார் மரங்களை வெட்டிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை.

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் யூனியனுக்குட்பட்ட சவுதாபுரம் ஊராட்சியில் 2000 பேர் வரை வசிக்கும் மக்கள் தொகை கொண்ட ஊராட்சி ஆகும்

கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு இப்பகுதியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் அரசுபுறம்போக்கு இடம், குடியிருப்பு, சாலைப் பகுதியில் வேப்பம் மரம், புங்கம் மரம், நாவல் மரம், பாதனி மரம், அரசமரம், எலுமிச்சை,மற்றும் பறவைகளின் உணவுக்காக கொய்யா,ஆரஞ்சு, வேம்பு மரம்,மாம்பழம், மற்றும் காய்கறிகள் என, 44 வகையான 3,200 மரக்கன்றுகளை இங்கே நட்டுள்ளனர். மேற்பட்ட மரங்கள், செடிகள் ஊராட்சி சார்பில் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தனர் . கோடை காலத்தில் இப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்ட போதிலும் தண்ணீரை விலைக்கு வாங்கி இப்பகுதியில் உள்ள மரங்களுக்கு ஊற்றி பாதுகாக்கப்பட்டன.

இந்நிலையில் இரண்டு ஏக்கரில் நன்கு வளர்ந்த மாம்பழம், கொய்யா,மாதுளை, சப்போட்டா, பாதாம் மரம்,நெல்லிக்காய், கொடுக்காப்புளி, புளியமரம்,எலுமிச்சை, சாத்துக்கொடி, என 200-க்கும் மேற்பட்ட நன்கு வளர்ந்த மரங்களை சமூகவிரோதிகள் வெட்டி சாய்த்து உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பஞ்சாயத்து நிர்வாகம், ஊர் பொதுமக்கள் இது தொடர்பாக வெப்படை காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில் மரங்களை வெட்டிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

CATEGORIES
TAGS