2000 மாணவர்கள் பங்கேற்கும் மெகா சிம்போசியம் பிரபிக்யான் 24 தொழில்நுட்பப் போட்டி தொடக்க விழா நடைபெற்றது.
திருவள்ளூரை அடுத்த அரண்வாயல் பகுதியில் இயங்கி வரும் பிரதீயுக்ஷா பொறியியல் கல்லூரியில் 2000 மாணவர்கள் பங்கேற்கும் மெகா சிம்போசியம் பிரபிக்யான் 24 தொழில்நுட்பப் போட்டி தொடக்க விழா நடைபெற்றது.
கல்லூரியின் இயக்குனர் பியூலா தேவமலர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கேட்டர்பில்லர் நிறுவனத்தின் மேலாளர் டாக்டர் சரவணன் கலந்து கொண்டு தொழில் நுட்பப் போட்டியை தொடங்கி வைத்தார்.
இதை தொடர்ந்து அவர் மாணவர்களிடையே உரையாற்றும் போது மாணவர்களுக்கு கல்வியுடன் படைப்புத்திறன் அவசியம் இருக்க வேண்டும் ஆகையால் மாணவர்கள் இது போன்ற போட்டிகளில் அதிக அளவில் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.
மார்ச் 22 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் இப்போட்டியில் மாநிலம் முழுவதும் உள்ள 120 கல்லூரிகளைச் சேர்ந்த 2000 மாணவர்கள் பங்கேற்கின்றனர் இதில் முதல் பரிசாக ரூபாய் 5 லட்சம் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இப் போட்டியில்
24 மணி நேர கோடத்தான் போட்டி, மற்றும் ட்ரோனேதன், ஐடியாதான் ரோபோ ரேஸ் தொழில்நுட்ப வினாடி வினா உணவு மற்றும் ஊட்டச்சத்து பயோ ஷோகேஸ் உள்ளிட்ட 32 வகையான தொழில்நுட்ப போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் மற்றும் அனைத்து துறை எச்ஓடிக்கல் மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.