BREAKING NEWS

2024 லும் குடியுரிமை உள்ள கிராம மக்கள் மருத்துவமனைக்கு டோலி கட்டி கொண்டு செல்லும் அவல நிலை

2024 லும் குடியுரிமை உள்ள கிராம மக்கள் மருத்துவமனைக்கு டோலி கட்டி கொண்டு செல்லும் அவல நிலை.

 

திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கொடைக்கானலில் விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாக கொண்டுள்ள கிளை கிராமங்கள் அதிகம் உள்ளன இந்நிலையில் கொடைக்கானல் தாலுகாவுக்கு உட்பட்ட வெள்ள கெவி என்னும் கிராமம் கொடைக்கானலில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

வெள்ள கவி கிராமத்தில் அத்தியாவசியமான பொருட்கள் வாங்குவதற்கும் மருத்துவமனை செல்வதற்கும் கொடைக்கானல் அல்லது பெரியகுளம் பகுதிக்கு செல்ல வேண்டும் இந்நிலையில் வெள்ளைகவி கிராமத்திலிருந்து கல்லாற்று வழியாக சின்னூர் சென்று பெரியகுளம் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது நிலையில் கடந்த வாரங்களாக கொடைக்கானலில் பெய்து வரும் கன மழையால் கல்லாற்றில் வெள்ளப்பெருக்கு அதிகமாக உள்ளது.

மேலும் வெள்ளகவி கிராம மக்கள் பெரியகுளம் சென்று வருவதற்கு சாலை வசதிகள் இல்லாததாலும் கல்லாற்றை கடந்து செல்வதற்கான பாலங்கள் இல்லாததாலும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

அவசர தேவையான மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளை டோலி கட்டி செல்லும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது.

வெள்ளை கவி கிராமத்தில் சுமார் நாறுக்கும் மேற்பட்ட வாக்காளர் உள்ள நிலையில் வெள்ள கவி மக்களுக்கு சாலை வசதிகள் செய்து தராமல் தமிழக அரசாங்கம் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது இதனால் வெள்ளை கவி கிராம மக்கள் பலமுறை கோரிக்கைக்கு மேல் கோரிக்கை வைத்தும் இதுவரை சாலை வசதிகள் செய்து தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வெள்ள கவி கிராமத்தில் ஆரஞ்சு, பலாப்பழம், அவகோடா, சாத்துக்குடி ,காபி போன்ற பல வகை பணப்பயிர்கள் பயிரிட்டப்படுகிறது அதனைக் கொண்டு செல்வதற்கான முறையான சாலை வசதிகள் இல்லை என்பதே அப்பகுதி மக்களின் வேதனையாக உள்ளது.

CATEGORIES
TAGS