BREAKING NEWS

40ஆண்டுகளுக்கும் மேலாக பூங்காவில் வியாபாரம் செய்து வரும் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்..

40ஆண்டுகளுக்கும் மேலாக பூங்காவில் வியாபாரம் செய்து வரும் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்..

40ஆண்டுகளுக்கும் மேலாக பூங்காவில் வியாபாரம் செய்து வரும் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி

40-க்கும் மேற்பட்ட தள்ளுவண்டி வியாபாரிகள் கடைகளை அடைத்து பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள

வைகைஅணை பூங்கா மாவட்டத்தில் சிறந்த சுற்றுலாத்தளமாக விளங்கி வருகிறது.

இங்குள்ள இடது கரை பூங்கா , வலது கரை பூங்கா , சிறுவர் பூங்கா பகுதிகளில்

ஆண்டுதோறும் ஒப்பந்த தொகை அடிப்படையில் 40க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் தள்ளு வண்டிகளில் வியாபாரம் செய்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் வைகை பொதுப்பணித்துறை சார்பில் புதிதாக 20 க்கும் மேற்பட்ட தள்ளுவண்டி கடைகளுக்கு பூங்கா பகுதியில் அனுமதி வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் 40 ஆண்டுகளாக பூங்காவை நம்பி வாழ்க்கை நடத்தி வரும் தங்களது வாழ்வாதாரமே பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டி 40 ஆண்டுகளாக தள்ளு வண்டிகளில் வியாபாரம் செய்து வரும் சிறு வியாபாரிகள் வைகைஅணை பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகம் சென்று வைகைஅணை உதவி செயற்பொறியாளர் முருகேசனிடம் முறையிட்டு கடுமையான வாக்குவாதம் செய்தனர்.

இதற்கிடையே மேலும் ஆத்திரம் அடைந்து அதன் அருகே சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவல்துறை பேச்சுவார்த்தையை அடுத்து அந்த பகுதியிலேயே போராட்டத்தை கைவிட்டு அமர்ந்துள்ள 40 க்கு மேற்பட்ட சிறு வியாபாரிகள் குடும்பத்தினர்.

தங்களது கோரிக்கை நிறைவேறாமல் இங்கிருந்து செல்ல மாட்டோம் என்றும் கோரிக்கை நிறைவேறாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS