BREAKING NEWS

48 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா

மயிலாடுதுறை அருகே கஞ்சா நகரம் படைவெட்டி மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா 48 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற திருவிழாவில் விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து வழிபாடு செய்தனர்: –

 

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் அருகே கஞ்சாநகரம் என்ற கிராமத்தில் பழமை வாய்ந்த படைப்பட்டி மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது ஆலயத்தின் திருவிழா கடந்த 48 ஆண்டுகளுக்கு முன்பு ஊரில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக நிறுத்தப்பட்டது தொடர்ந்து திருவிழா நடத்த முடியாமல் ஆலய வழிபாடு தடைப்பட்டு வந்த நிலையில் கிராம மக்கள் ஒன்றிணைந்து திருவிழாவை நடத்த முடிவு செய்தனர் அதன்படி ஆலய திருவிழா கடந்த 22ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கி நடைபெற்று வருகிறது விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி உற்சவம் நேற்று சிறப்பாக நடைபெற்றது இதனை முன்னிட்டு சக்தி கரகம் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக ஆலயத்திற்கு எடுத்துவரப்பட்டது தொடர்ந்து மங்கல வாத்தியங்கள் முழங்க சக்தி கரகம் முன்னிலையில் விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

CATEGORIES
TAGS