50 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ளது, உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல வலியுறுத்தல்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் விவசாயிகள் சாகுபடி செய்த நெல்லை கொள்முதல் செய்வதற்காக 172 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன இதுவரையில் ஒரு லட்சத்து 15 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்காலிக சேமிப்புக் கிடங்குகளை தமிழக அரசு மூடிய காரணத்தால் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலேயே தேங்கி கிடக்கிறது இதுவரை 65 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் மட்டுமே வெளி மாநிலங்களுக்கும் வெளி மாவட்டத்திற்கும் அரவைக்காக அனுப்பப்பட்ட நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்காலிக சேமிப்புக் கிடங்குகளை தமிழக அரசு மூடிய காரணத்தால் 50,000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கிறது.
இதனை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று மயிலாடுதுறைக்கு வருகை புரிந்த ஐ என் டி யு சி தொழிற்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கா இளவரி நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைகளை அப்புறப்படுத்த வேண்டிய நிர்வாகம் உடனடியாக அப்புறப்படுத்தாத காரணத்தால் கடைநிலை ஊழியர்கள் பாதிக்கப்படுகின்றனர் மேலும் மேல் நடவடிக்கை என்ற பெயரில் எந்தவிதமான விசாரணையோ நோட்டீஸ் அனுப்பாமலும் ஊழியர்கள் பழிவாங்கப்படுகின்றனர் இந்த போக்கை வன்மையாக கண்டிக்கின்றோம் என்று தெரிவித்துள்ளார்.