தலைப்பு செய்திகள்
இயக்குநர்கள் சங்கத் தேர்தல்: ஆர்.கே.செல்வமணி அணி வெற்றி.
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பள்ளி ஒன்றில் தமிழ்நாடு சினிமா இயக்குநர்கள் சங்கத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. தபால் வாக்குகள் உட்பட மொத்தம் ஆயிரத்து 536 வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்குகள் எண்ணப்பட்டன.
புதுவசந்தம் அணியின் சார்பாக தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி 955 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இமயம் அணி சார்பாக தலைவர் பதவிக்கு போட்டியிட்ட இயக்குநர் பாக்கியராஜ், 566 வாக்குகள் மட்டுமே பெற்றார்.
வெற்றி சான்றிதழை பெற்றபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.கே.செல்வமணி, தன்னுடைய வெற்றிக்கு அணியின் உறுப்பினர்களே காரணம் என்று கூறினார். தேர்தலுக்கு முன்பு இரு அணியாக இருந்தபோதிலும், தேர்தலுக்கு பின்னர் இப்போது இயக்குநர்கள் எல்லோரும் ஒரே அணியாக மாறி விட்டதாகவும் ஆர்.கே.செல்வமணி குறிப்பிட்டார்.
CATEGORIES சென்னை