BREAKING NEWS

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ராகுல் காந்தி அவர்களை பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து பதவி நீக்கம் செய்த மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் சத்தியாகிரக அறவழிப் போராட்டம் காரைக்குடி காந்தி திடலில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி அவர்கள் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது‌.

 

போராட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ராமசாமி, திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் ராம கருமாணிக்கம், மற்றும் மாநில மாவட்ட வட்டார நகர நிர்வாகிகள் மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் அனைவரும் பங்கு பெற்று சிறப்பாக நடைபெற்று வருகிறது.

காரைக்குடி செய்தியாளர் முத்துராஜன்.

CATEGORIES
TAGS