60 ஆண்டுகளுக்கு பிறகு வெகு சிறப்பாக நடைப்பெற்றது. ஆயிரம் கிடாக்கள் வெட்டி நேர்த்தி கடன் செய்த மக்கள் உற்றார், உறவினர், நண்பர்களை அழைத்து விருந்து வைத்தனர்.

தஞ்சை அருகில் உள்ள தெத்துவாசல் பட்டி கிராமத்தில் ஸ்ரீமகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் கிடா வெட்டி திருவிழா வெகு சிறப்பாக நடந்து வந்துள்ளது. இந்நிலையில் சாதி வேறுபாடு, பொருளாதார தட்டுபாடு காரணமாக கிடா வெட்டு திருவிழா தடைப்பட்டு இருந்தது.

இந்த ஆண்டு விவசாயம் சிறப்பாக அமைந்ததால் கிராம நாட்டமைக்காரர்கள் ஒன்று கூடி பேசி சாதி பேதம் இல்லாமல் அனைவரும் ஒன்றாக இணைந்து திருவிழா நடத்துவது என முடிவு செய்தனர்.

இதனை அடுத்து 60 ஆண்டுகளுக்கு பிறகு வீட்டுக்கு வீடு 3 கிடாக்கள். 5 கிடாக்கள் என ஸ்ரீமகாகாளியம்மனுக்கு 1000 கிடாக்கள் வெட்டப்பட்டன. கிராம மக்கள் கிடாவெட்டு திருவிழாவுக்கு வாருங்கள் என அழைப்பிதழ் அச்சடித்து உற்றார். உறவினர்கள், நண்பர்களை அழைத்து கறி குழம்பு, கறிவருவல், மீன் வருவல், முட்டையுடன் விருந்து வைத்தனர். பின்னர் வெற்றிலை தாம்புலம் கொடுத்து வீட்டுக்கு வந்த விருந்தாளிகளை வழி அனுப்பி வைத்தனர் இதனால் தெத்து வாசல்பட்டி கிராமம் விழா கோலமாக இருந்தது.
