திமுகவுக்கு வாக்கு சேகரித்த சுப . வீரபாண்டியன் பெண்களுக்கு தங்கத்தை காட்டிலும் கல்வி சிறந்தது.

திமுகவுக்கு வாக்கு சேகரித்த சுப . வீரபாண்டியன் திமுக சார்பில் பாராளுமன்றத்திற்கு போட்டியிடும் வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனுக்கு வாக்கு சேகரித்தார். போடி தேவர் சிலை அருகே பேசிய சுபா. வீரபாண்டியன் பெண்களுக்கு தங்கத்தை காட்டிலும் கல்வி சிறந்தது என அறிந்த தமிழக முதல்வர் பள்ளி படிக்கும் குழந்தைகளுக்கு ஆயிரம் ரூபாய் திட்டத்தை கொண்டு வந்தார்.
அதிமுகவிற்கு தலைமை யார் அவர் நான்கு இடங்களில் கூட வெற்றி பெற மாட்டார் 40 இடங்களிலும் திமுக தான் வெற்றி பெறப் போகிறது. மோடி ஆட்சியில் புல்வாமா தாக்குதலில் அப்பாவி ராணுவ வீரர்கள் 40 பேர் படுகொலை செய்யப்பட்டனர். அதனை அரசியல் ஆக்கியது மோடி அரசு. மகளிர் உதவித்தொகை ஏழை எளிய மக்களுக்கு கல்விக்காகவும் மருத்துவச் செலவிற்காகவும் அத்தியாவசிய தேவைக்காகவும் மிகப்பெரிய பங்கு வைக்கிறது.
தமிழக அரசு தரும் ஆயிரம் ரூபாய். நமது கூட்டணி கட்சிகளில் கட்சி கொடியின் நிறங்கள் வேண்டுமானால் மாறி இருக்கலாம் ஆனால் நம் எண்ணங்கள் ஒன்றே மத்தியில் மோடி ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்பதே என கூட்டத்தில் சுப. வீரபாண்டியன் பொதுமக்களிடம் உரையாடினார் இவரது பேச்சு கேட்பதற்காக என்னற்ற பொதுமக்கள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் உடன் இருந்தனர்.