BREAKING NEWS

689 வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுக்காப்புடன் வாகனங்கள் மூலம் அனுப்பும் பணியை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான மு.அருணா பார்வையிட்டார்…

நாடாளுமன்றத் தேர்தல் நாளை நடைபெறுவதை ஒட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கூடலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு தனியார் பள்ளியில் இருந்து மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான மு. அருணா மற்றும் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் 689 வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுக்காப்புடன் வாகனங்கள் மூலம் அனுப்பும் பணியை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான மு.அருணா பார்வையிட்டார்…

தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நாளை நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளில் உதகை,குன்னூர், கூடலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு தனியார் பள்ளிகளிலிருந்து மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி பலத்த போலிஸ் பாதுக்காப்புடன் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கு 689 வாக்குசாவடி மையங்கள் உள்ளன.
மேலும் மலை மாவட்டம் என்பதால் மலை கிராமங்களுக்கு செல்லக்கூடிய வாக்குப்பதிவு இயந்திரங்கள் முன்னதாக அனுப்பப்பட்டு வருகிறது.

அதேபோல 689 வாக்குச்சாவடி மையங்களுக்கு 845 வாக்குபதிவு இயந்திரங்களும், மாற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று வாக்களிக்க சக்கர நாற்காலிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாகனங்களில் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

இதனை மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான மு. அருணா பார்வையிட்டார்.

 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் குறிப்பாக எருமாடு, ஓவேலி, சேரம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் போலீசாருடன் இணைந்து வனத்துறையினர் யானை விரட்டும் குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் எனவும், நீலகிரி மாவட்டத்தில் 176 பதற்றமான சோதனைச் சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், பலத்த பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

 

CATEGORIES
TAGS