திருவாரூரில் 78வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் சாரூஸ்ரீ தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
திருவாரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் 78 சுதந்திர தின விழா மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது தொடர்ந்து தேசியக் கொடியை ஏற்றி வைத்து சமாதான புறாவை பறக்கவிட்டார் தொடர்ந்து காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஆட்சியர் சாருஸ்ரீ ஏற்றுக்கொண்டார்
இதனையடுத்து சிறப்பாக பணிபுரிந்த காவலர்கள் அரசு ஊழியர்கள் மருத்துவர்கள் செவிலியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்
CATEGORIES திருவாருர்