78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தேசிய கொடியை ஏற்றினார் கடலூர்
78 வது சுதந்திர தின விழா
கடலூர் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு
கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
கடலூர் மஞ்சக்குப்பம் அறிஞர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நாட்டின் 78வது சுதந்திர தின விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினர், தீயணைப்பு துறை, ஊர்காவல் படையினரின் அணி வகுபபு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
சமாதானத்தை வலியுறுத்தும் விதமாக வெண் புறாக்கள் வானில் பறக்க விடப்பட்டன. பின்னர் தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்கள்
கெளரவிக்கபட்டனர். பின்னர் 78 பயனாளிகளுக்கு 94.87 லட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து அரசு துறையில் சிறப்பாக பணிபுரிந்தவர்களை பாராட்டும் விதமாக சான்றிதழ்கள் வழங்கினர்.
தொடர்ந்து பல்வேறு பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராம் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்