கலவையான விமர்சனங்களை பெற்ற தங்கலான் : திரையரங்கு விமர்சனம்
கலவையான விமர்சனங்களை பெற்ற தங்கலான் : திரையரங்கு விமர்சனம்
விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் செத்து இயக்கத்தில் வெளியான தங்கலான் திரைப்படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனத்தை வழங்கியுள்ளனர்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான ‘தங்கலான்’ திரைப்படம் சுதந்திர தினமான 15-ஆம் தேதி மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி திருவோத்து, டேனியல் கால்டாகிரோன், பசுபதி மற்றும் முத்துக்குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
அந்த வகையில் இன்று காலை சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் காலை 9 மணி அளவில் இந்த படம் திரையிடப்பட்டது. படம் வெளியானதையொட்டி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். படம் முடிந்த பின்னர் திரையரங்கில் இருந்து வெளியே வந்த ரசிகர்கள், தங்களது விமர்சனங்களை பதிவு செய்துள்ளனர். அதில் பலரும் இது விக்ரம் படமாக இருப்பதாகவும், அதே சமயம் பா.ரஞ்சித்தின் இயக்கமும் சிறப்பாக இருப்பதாக கூறியுள்ளனர்.
அதுமட்டுமின்றி படத்தில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பின்னணி இசையில் முக்கிய பங்காற்றியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக படத்தில் விக்ரமின் நடிப்பு பிரமிக்க வைப்பதாக உள்ளது என பலர் தெரிவித்தனர். படத்தில் சண்டை காட்சிகள் சிறப்பாக இருப்பதாகவும், ஒளிப்பதிவு எந்தவித தேக்கமும் இன்று இருப்பதாகவும் ரசிகர்கள் கூறினர். மேலும் படத்திற்கு பலரும் தங்களது ரேட்டிங் மதிப்பெண்களை வழங்கினர்.