தஞ்சையை சேர்ந்த இயற்கை ஆர்வலருக்கு தமிழக அரசு விருது மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
தஞ்சையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தஞ்சை நல்லவன்னியன்குடிகாடு பகுதியை சேர்ந்த இயற்கை ஆர்வலர் பசுமை நாயகன்,தஞ்சை கிரீன் ஸ்டார், ஜா.செ.வில்லியம் ஸ்டீபன்சன் இயற்கைக்கு ஆற்றிவரும் சேவையை பாராட்டி அவருக்கு தமிழக அரசின் பசுமை முதன்மையாளர் என்ற விருதினை தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் வழங்கி பாராட்டியுள்ளார்.இவரது சேவையை பாராட்டி இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள பல்வேறு அமைப்புகள் விதைகளின் பேரரசர், பசுமைப் புரவலர், அப்துல் கலாம் விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, தஞ்சை கிரீன் சாம்பியன் என
பல்வேறு விருதுகளை வழங்கி பாராட்டியுள்ளது.
CATEGORIES தஞ்சாவூர்
