78வது சுதந்திர தின விழாவில் பழங்குடியின மக்களின் நடனம் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளுர் மக்களை வெகுவாக கவர்ந்தது
உதகையில் இன்று நடைபெற்ற 78வது சுதந்திர தின விழாவில் பழங்குடியின மக்களின் நடனம் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களின் மோப்ப நாய்களான வெற்றி, மதி, மோக்கா , ஜீரோ சாகச நிகழ்ச்சிகள் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளுர் மக்களை வெகுவாக கவர்ந்தது.
இன்று நாடு முழுவதும் 78வது சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்ட்டாடப்பட்டு வரும் நிலையில் இன்று நீலகிரி மாவட்டம் உதகை அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் சுதந்திர தினவிழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
மாவட்ட ஆட்சி தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு தேசிய கொடியேற்றி காவல்துறையினர் மற்றும் என்.சி.சி மாணவர்களின் அணி வகுப்பை ஏற்றுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் 15 பயனாளிகளுக்கு 25 லட்சத்து 57 ஆயிரத்திற்கான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சி தலைவர் வழங்கினார்.
மேலும் காவல்த்துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும், விருதுகள் வழங்கி கொளரவித்தார்.
இதனை தொடர்ந்து பழங்குடியின மக்களான இருளர் மற்றும் பெட்ட குறும்பர் இன மக்கள் அவர்களின் கலாச்சார உடை அணிந்து நடனம் ஆடியது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. இதேபோல் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
.