BREAKING NEWS

78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்

ராணிப்பேட்டை மாவட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 78-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா மூவர்ண தேசியகொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் பின்னர் திறந்த ஜீப்பில் சென்று காவலர்களின் அணிவகுப்பை பார்வையிட்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்..

முன்னதாக இந்திய நாட்டிலேயே முதன்முறையாக ராணிப்பேட்டையில் நிறுவப்பட்ட அண்ணல் மகாத்மாகாந்தி சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார் தொடர்ந்து மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்கள், அரசு ஊழியர்களுக்கு நற்சான்றிதழ்களை ஆட்சியர் சந்திரகலா வழங்கினார், விழாவில் வேளாண்மைத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலத்துறை, சிறுபான்மையினர் நலத்துறை, வருவாய்த்துறை, தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட துறைகளின் மகளிர் திட்டம் உள்பட சார்பில் 58 பயனாளிகளுக்கு ரூபாய் 25 லட்சத்து 90,000 ஆயிரம் மதிப்பில் அரசின் மாபெரும் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார் விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி, வருவாய் அலுவலர் சுரேஷ், கோட்டாட்சியர் ராஜராஜன், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் ஜெயசுதா மற்றும் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் பள்ளி மாணவ மாணவிகளின் பரதநாட்டியம், ஆடல், பாடல் உட்பட கண்கவர் கலை நிகழ்ச்சிகள்
நடைபெற்றது.

CATEGORIES
TAGS