80 பழைய 2000 ரூபாய் நோட்டுக்களை ரிசவர் வங்கியில் மாற்றி தருவதாக தெரிவித்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஏமாற்றி விட்டதாக எஸ் பி அலுவலகத்தில் புகார்.
சோளிங்கர் அடுத்த ஜம்பு குளம் பகுதியை சேர்ந்தவர் விநாயகம் இவர் எல்ஐசி ஏஜென்ட் ஆக பணியாற்றி வருகிறார்
இந்த நிலையில் அம்மூர் பகுதியில் உள்ள வங்கியில் அடகு வைத்திருக்கும் நகைகளை மீட்பதற்காக விநாயகம் வேலூர் பகுதியில் உள்ள அவரது தாயாரிடம் பணம் கேட்டுள்ளார் அப்போது அவர் 80 பழைய 2000 ரூபாய் நோட்டுகள் என 1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை வழங்கியதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் கடந்த 29.02.2024 அன்று விநாயகம் 80 பழைய 2000 ரூபாய்க்களை மாற்றுவதற்காக தனது உறவினரான அம்மூர் பகுதியை சேர்ந்த தனபால் சென்னை மாநகரில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவரிடம் வழங்கியதாகவும் விநாயகம் வழங்கிய 80 பழைய 2000 ரூபாய்களை சென்னை ரிசர்வ் வங்கியில் மாற்றுவதற்கு ஒரு நோட்டிற்கு 200 ரூபாய் என 80 நோட்டுக்கு என மொத்தமாக 16 ஆயிரம் ரூபாய் கமிஷனாக பிடிக்கப்படும் எனவும் மீதம் 1,44,000 ரூபாய் பணம் மாற்றி தரப்படும் என விநாயகத்திடம் தனபால் தெரிவித்து பணத்தினை பெற்று கொண்டதாக கூறப்படுகிறது
இதனை தொடர்ந்து தனபால் பணத்தினை மாற்றி தருவதாக தெரிவித்து பல நாட்கள் கடந்த நிலையில் பணத்தை மாற்றி தராமல் காலம் கடத்தி வந்து நிலையில் பணத்தை திருப்பி கேட்ட விநாயகத்தை தனபால் மற்றும் அவரது சகோதரர் பாபு ஆகியோர் மிரட்டியதாக கூறப்படுகிறது
இதனை தொடர்ந்து சோளிங்கர் காவல் நிலையத்தில் 5.4.2024 அன்று புகார் தெரிவித்துள்ள நிலையில் தொடர்ந்து தனபால் மற்றும் அவரது சகோதரர் பாபுவின் மூலமாக மிரட்டல் வருவதன் காரணமாக விநாயகம் இன்று ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வருகை தந்து தனபால் மற்றும் அவரது சகோதர ர் பாபு ஆகிய இருவரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேலும் தான் வழங்கிய பணத்தினை மீட்டு தர வேண்டும் என தெரிவித்து புகார் மனுவினை வழங்கி உள்ளார்