80 வயது கடந்த தாய் தந்தையரை வீட்டை விட்டு வெளியேற்றிய இளைய மகன் படுக்க இடமில்லாமல் தவிக்கும் பெற்றோர்கள்

80 வயது கடந்த தாய் தந்தையரை வீட்டை விட்டு வெளியேற்றிய இளைய மகன் படுக்க இடமில்லாமல் தவிக்கும் பெற்றோர்கள்.மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது வீட்டை பெற்று தர பெற்றோர்கள் மனு அளித்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை திருவிழந்தூரில் வசிக்க கூடியவர் பக்கிரிசாமி மகன் கணேசன். (80 வயது)இவருக்கு ராஜ பாக்கியம் என்கிற(78 வயது- காது கேளாத )மனைவியும்,ராஜி,மதிவானன் என்கிற இரண்டு மகன்களும்,இரண்டு மகள்களும் உள்ளனர்.
அனைவருக்கும் திருமணம் ஆகி விட்டது.பெரிய மகன் ராஜிவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில்,ராஜிவின் மனைவி சுதா புற்றுநோயால் இறந்து விட்டார். இந்த நிலையில்,அவரது இரண்டாவது மகன் மதிவாணன் தான் சம்பாதித்து கட்டிய வீட்டிலிருந்து கனேசனையும்,அவரது மனைவியையும்,வீட்டை விட்டு வெளியேற வற்புறுத்தி அவர்களை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார் இந்நிலையில் நேற்று அரிவாளை எடுத்து கொண்டு என்னை வீட்டை விட்டு வெளியேற கூறி விரட்டி வந்தார். இதனால் என் கிராம மக்கள் என்னை அழைத்து அடைக்கலம் கொடுத்து காப்பாற்றினார்கள்.என் உழைப்பில் கட்டிய மாடி வீட்டை,என் இளைய மகன் மதிவாணன் அபகரித்தை எனக்கு மீட்டு தன்னிடம் வழங்குமாறு,80 வயது கடந்த அந்த பெற்றோர்கள்,மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தது காண்போரை கண்கலங்க வைத்தது.