BREAKING NEWS

800 ஆண்டுகள் பழமை வாய்ந்த வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா.

800 ஆண்டுகள் பழமை வாய்ந்த வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா.

800 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழகத்தின் பிரசித்தி பெற்ற வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு போடிநாயக்கனூர் அருகே உள்ள கிராமத்தில் இருந்து சுமார் 300 ஆண்டுகளாக காவடி எடுத்து கால்நடையாக நடந்து செல்லும் பக்தர்கள்.

சுமார் 22 கிலோமீட்டர் காவடி சுமந்து பாரம்பரிய தேவராட்டம் ஆடியபடி நேர்த்திக்கடன் செலுத்தும் கிராம மக்கள்தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ளது கரட்டுப்பட்டி கிராமம். இங்கு போடிநாயக்கனூரை ஆண்ட ஜமீன்தார் வம்சாவளியினர் வசித்து வருகின்றனர்இங்கிருந்து சுமார் 22 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது வீரபாண்டி கௌமாரியம்மன் திருக்கோவில்.தமிழகத்தின் பிரசித்தி பெற்ற அம்மன் தலங்களில் ஒன்றானதும் தேனி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

கடந்த செவ்வாய் கிழமை 07.05.24தொடங்கி வருகின்ற 14.05.24 செவ்வாய்க்கிழமை வரை எட்டு நாட்கள் நடைபெறுகிறது.தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் விரதம் இருந்து அக்னி சட்டி ஆயிரம் கண் பானை, காவடிகள் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.போடிநாயக்கனூர் அருகே உள்ள கரட்டுப்பட்டி கிராமத்தில் உள்ள கிராம மக்கள் சுமார் 300 ஆண்டுகளாக காவடி சுமந்து தேவராட்டம் ஆடி சுமார் 22 கிலோமீட்டர் கால்நடையாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் திருவிழா தொடங்கி மூன்றாவது நாள் போடிநாயக்கனூர் கரட்டுப்பட்டி கிராமத்தில் உள்ள கிராம மக்கள் ஒன்று சேர்ந்து காவடிகள் சுமந்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை100 க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் பாரம்பரிய ஆட்டமான தேவராட்டம் ஆடி காவடிகள் சுமந்து வீரபாண்டி வரை சென்று தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS