BREAKING NEWS

நடிகையும் பாடகியுமான ஸ்வாகதா தொழிலபதிபரை மணந்தார். அழகிய புகைப்படங்கள் வைரல்..

தமிழ் சினிமாவில் பாடகியாகவும், நடிகையாகவும் வலம் வருபவர் ஸ்வாகதா. இவர் பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் அக்‌ஷய் குமாரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். கங்கை நதிக்கரையில் இமயமலை அடிவாரத்தில் ரிஷிகேஷில் இவர்களின் திருமணம் நடைபெற்றுள்ளது.

மார்ச் 4 ஆம் தேதி நடந்த இந்த விழாவில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.

தற்போது தனது திருமண விழாவின் படங்களை பகிர்ந்து கொண்ட ஸ்வாகதா, எங்கள் பெற்றோர்கள், எங்கள் குரு மற்றும் எங்களை ஒன்றிணைத்த அனைவரின் ஆசியுடன், நான் மார்ச் 4, 2022 அன்று ரிஷிகேஷில் ஆற்றங்கரையில் நடந்த அழகான திருமண விழாவில் அக்ஷய் குமாரை மணந்தேன். கங்கா என்று தெரிவித்துள்ளார்.

ஸ்வாகதா தமிழில் சில பாடல்களையும், காயல் மற்றும் இன்ட்ரா ஆகிய படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். இந்த படங்கள் விரைவில் வெளியாக இருக்கிறது. இதனிடையே திருமணம் முடிந்த நடிகையும் பாடகியுமான ஸ்வாகதாவுக்கு நடிகர், நடிகைகள், பாடகர்கள், ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )