9ம் ஆண்டு வருஷாபிஷேக விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஜெயகணபதி திருக்கோயிலில் 9ம் ஆண்டு வருஷாபிஷேகம் விழா நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து. திருக்கோயில் அதிகாலை 4.00 மணிக்கு திறக்கப்பட்டு விக்னேஸ்வர பூஜை, சண்முக ஜபம் மற்றும் சிறப்பு பூஜைகளும், கணபதி ஹோமம், தன பூஜை, நவக்கிரக பூஜை, கோ பூஜை, யாகசாலை பூஜைகள் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. மேளதாளங்கள் முழங்க யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, திருக்கோவில் பிரகாரம் வழியாக எடுத்து வந்து கோபுர கலசத்துக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மூலஸ்தானத்தில் சாமிக்கு, 21 அபிஷேக சிறப்பு பூஜைகள், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. வருஷாபிஷேகம் விழாவில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பக்தர்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் தாசில்தார்கள் சுசீலா, ஐயப்பன், அமுதா, ராஜ்குமார், தங்கையா, அதிமுக நகர செயலாளர் விஜய பாண்டியன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிச்சாமி, ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி மற்றும் உமாதேவி, பாலு, செல்ல பாண்டியன், கிருஷ்ணன், மதன்குமார், ராமமூர்த்தி, கோபி, முருகன், பழனி குமார், உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.