கிருஷ்ணகிரியில் என் ஹிஜாப் என் உரிமை என கர்நாடக அரசு மற்றும் உயர் நீதிமன்றத்தை கண்டித்து அனைத்து ஜமாத் சார்பில் ஆர்ப்பாட்டம் – தேசிய கொடியில் ஹிஜாப் அணிந்துகொண்டு பங்கேற்ற பெண்கள்.

கர்நாடக மாநிலத்தில் பள்ளி கல்லூரிகளில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்து செல்ல தடை விதித்தது. கர்நாடக அரசின் தடை விதிப்பை கர்நாடக உயர்நீதிமன்றம் செல்லும் என தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பையும் கர்நாடக அரசையும் கண்டித்து இஸ்லாமிய சமுகத்தின் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி புதிய பேருந்து அருகே கிருஷ்ணகிரி அஹ்லே சுன்னத் வல் ஜமாத் சொசைடி எனப்படும் அனைத்து ஜமாத் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பட்டத்திற்க்கு அனைத்து ஜமாத் தலைவர் சையத் இர்பானுல்லா உசைனீ தலைமை வகித்தார்.

செயலாளர் ஆசாத் மற்றும் அனைத்து ஜமாத்தார்கள் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்தியாவில் அனைத்து மதத்தினரும் மத அடையாளங்கள் உள்ளது. அந்தந்த மதத்தினர் அவர்களது ஆடைகளை அணி வருகின்றனர். அதுபோல் இஸ்லாமிய மதத்தில் பெண்கள் ஹிஜாப் அணிந்து செல்கின்றனர். இந்திய அரசியலமைப்பு சட்டம் 25 மூலம் அனைத்து மதத்தினருக்கும் மத சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் இருந்தே முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்து கல்வி நிலையங்களுக்கு சென்று வருகின்றனர்.

கர்நாடக அரசின் இந்த நடவடிக்கை அரசியலமைப்பு சட்டம் கொடுத்த உரிமைக்கு எதிரானதாகும். முகத்திரை என்னும் ஹிஜாப் அணிவது பெண்களின் தனிப்பட்ட உரிமை அந்த உரிமையில் தலையிட யாருக்கும் அதிகாரம் இல்லை என்று கர்நாடக அரசையும் உயர்நீதிமன்றத்தையும் தொடர்ந்து இஸ்லாமியருக்கு எதிராக செயல்படும் ஒன்றிய பாஜக அரசையை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஏராளமான முஸ்லிம் பெண்கள் இந்திய நாட்டின் தேசிய கொடியில் ஹிஜாப் அணிந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்
