மார்ச் 28,, 29 ல் நடைபெறும் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தை பொது மக்களிடம் விளக்கி தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் ஏஐடியூசி சார்பில் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

கடந்த 8 வருடங்களாக மோடி அரசின் ஆட்சியில் பெட்ரோல், டீசல் , எரிவாயு விலை உயர்வு காரணமாக குடும்பத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் தொழில் வாய்ப்பிற்கான பொருட்கள் அனைத்தும் விலை ஊயர்ந்துள்ளது. இதனால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சிறு குறு தொழில்கள் நசிந்து போய் உள்ளது. மக்களுக்கு சேவை செய்கின்ற பொதுத்துறை நிறுவனங்களான வங்கி, மின்சாரம், போக்குவரத்து, இன்சூரன்ஸ் ,நிலக்கரி, ரயில்வே, ராணுவ தளவாட உற்பத்தி சாலைகள், நிலக்கரி சுரங்கங்கள் உள்ளிட்ட மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் கார்ப்பரேட் பெரு நிறுவனங்களுக்கு தாரை வார்க்க படுகின்றன. பொதுத்துறை நிறுவனங்களை விற்று பணமாக்கும் தேசிய பணமயமாக்கல் திட்டத்தை மோடி அறிவித்து உள்ளார்.

இது ஒட்டுமொத்த மக்கள் சேவையையும் பாதிக்கின்ற திட்டமாகும். விவசாயிகள் முக்கிய கோரிக்கையான ஆதார விலை நிர்ணயம் செய்யப்படவேண்டும் என்பது உள்ளிட்ட டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் எதையும் அமல்படுத்தவில்லை . அனைத்து தரப்பு மக்களுக்கும் எதிரான கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் ஒன்றிய மோடி அரசைக் கண்டித்து நடைபெறும் வேலை நிறுத்தத்திற்கு அனைத்து தரப்பு தொழிலாளர்களும் பொதுமக்களும் வணிகர்களும் ஆதரவு அளித்திட வேண்டும் என்று ஏஐடியூசி தொழிற்சங்கம் சார்பில் தஞ்சை பழைய பேருந்து நிலையம், அரசு விரைவு போக்குவரத்து பணிமனை,ரயில்வே நிலையம், ஆட்டோ நிறுத்தங்கள், பூக்காரத் தெரு உள்ளிட்ட இடங்களில் துண்டு பிரசுரங்கள் இன்று காலை 9மணி மதல் மதியம்1 மணி வரை விநியோகிக்கப்பட்டது. ஏஐடியூசி மாவட்ட தலைவர் வெ.சேவையா தலைமையில் மாவட்ட பொருளாளர் தி.கோவிந்த ராஜன், மாவட்ட துணைத்தலைவர் ஆர். பி.முத்துக்குமரன் போக்குவரத்து சங்க மாநில துணைத் தலைவர் துரை.மதிவாணன், கட்டுமான சங்க மாவட்ட துணை செயலாளர் பி.செல்வம், பூக்காராப் பகுதி செயலாளர் மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். துரை.மதிவாணன்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்
