மாவட்ட செய்திகள்
பிரசித்திப்பெற்ற தஞ்சை திட்டை குரு பகவான் கோவிலில் சசிகலா சாமி தரிசனம் பொதுமக்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்த சசிகலா தஞ்சை அருளானந்தம் நகரில் உள்ள தங்கி உள்ளனர். கடந்த முறை வந்த போது கட்சி நிர்வாகிகளை சந்தித்தார். அப்போது அவரது இல்லம் முன்பு ஏராளமான ஆதரவாளர்கள் குவிந்ததால் பரபரப்பாக காணப்பட்டது.

ஆனால் இந்த முறை அந்த அளவிற்கு ஆதரவாளர்கள் வரவில்லை என்பதால் வெறிச்சோடி காணப்படுகிறது. நேற்று முன்தினம் மறைந்த மா.நடராஜனின் 4 ஆம் ஆண்டு நினைவு தினம் என்பதால் முள்ளிவாய்க்கால் முற்றம் எதிரே உள்ள நடராஜன் சமாதியில் அஞ்சலி செலுத்தினார்.

அப்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஸின் சகோதரர் ராஜா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். நேற்றைய தினம் கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார் இன்று தஞ்சை அருகே பிரசித்தி பெற்ற திட்டை குரு பகவான் கோயிலில் சென்று சசிகலா சாமி தரிசனம் செய்தார்.

அங்கு அவருக்கு சிறப்பு பூஜைகள் தீபாராதனை காட்டப்பட்டது. நவக்கிரகங்களை சுற்றி வெளியே வந்த அவர் கோயிலின் வரலாறுகளை கேட்டறிந்தார் பின்னர் அங்கிருந்த பொதுமக்களுடன் சசிகலா புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
