BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் இன்று பதவியேற்பு.

நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் இன்று பதவியேற்பு

நடிகர் சங்கத்தில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் இன்று பதவியேற்கின்றனர்.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகள் 3 வருடத்துக்கு பின் கடந்த ஞாயிற்றுக்கிழமை எண்ணப்பட்டது. இதில், விஷால் தலைமையிலான பாண்டவர் அணி அனைத்துப் பதவிகளிலும் வெற்றிபெற்றது. தலைவராக நாசர், பொதுச்செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி, துணைத்தலைவர்களாக பூச்சி முருகன், கருணாஸ் ஆகியோர் தேர்வாகி உள்ளனர்.

நடிகர்கள் ராஜேஷ், பிரசன்னா, சிபிராஜ், நந்தா, ரமணா, சரவணன், ஸ்ரீமன், மனோபாலா, அஜய் ரத்னம், பசுபதி, ஜூனியர் பாலையா, விக்னேஷ், தளபதி தினேஷ், பிரேம்குமார், ஜெரால்டு, ரத்னப்பா, பிரகாஷ், ஹேமச்சந்திரன், காளிமுத்து, வாசுதேவன், நடிகைகள் குஷ்பு, லதா, கோவை சரளா, சோனியா ஆகிய 24 பேர் செயற்குழு உறுப்பினர்களாக வெற்றி பெற்றுள்ளனர்.

வெற்றி மகிழ்ச்சியில் விஷால், ரமணா

இந்நிலையில், நடிகர் சங்கச் செயற்குழு கூட்டம் நாசர் தலைமையில் இன்று நடக்கிறது. இதில் நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்கிறார்கள். செயற்குழுவில், நடிகர் சங்க கட்டிட பணிகள் குறித்தும், அதற்கான நிதி திரட்டுவது குறித்தும் முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )