மாவட்ட செய்திகள்
எடப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி கனிகா, தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை.

சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் கனிகா என்ற மாணவி தேசிய அளவில் சென்னையில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடும் போட்டியில் கலந்து கொண்டார். இதில் அண்டர் 14-இல் முதல் தங்கப் பதக்கத்தை வென்றார்.

இதனைதொடர்ந்து, மாணவி கனிகாவை பாராட்டும் விதமாக எடப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் பள்ளி தலைமையாசிரியர் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் தங்கப்பதக்கம் வழங்கினார்.

இதுகுறித்து பேசிய மாணவி கனிகா, துப்பாக்கிச் சுடும் போட்டியில் தான் கலந்து கொள்ள வாய்ப்பளித்த தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் பேசிய அவர், தான் வெற்றி பெற உறுதுணையாக இருந்த பயிற்சி ஆசிரியர் ராஜ்குமார் அவர்களுக்கு பதக்கத்தை சமர்ப்பிக்கிறேன் என்று கூறினார்.
இதனைதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இனி வரும் காலங்களில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெற வாய்ப்பு கிடைத்தால், இந்தியாவிற்கு தங்கப்பதக்கம் வென்று தருவேன்.

அதுதான் எனது லட்சியமும். மேலும், அப்பள்ளியின் தலைமையாசிரியர் கூறுகையில், தான் பணிபுரியும் பள்ளியின் மாணவி துப்பாக்கிச் சுடும் போட்டியில் தேசிய அளவிலான விருதை பெற்று கொடுத்தது பள்ளிக்கு மிகுந்த பெருமையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது என்று கூறினார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
