மாவட்ட செய்திகள்
தேனிமாவட்டம் ஆண்டிபட்டி ஏத்தக்கோவில் சாலை பகுதியில் திடீர் சாலைமறியலில்.
தேனிமாவட்டம் ஆண்டிபட்டி ஏத்தக்கோவில் சாலை பகுதியில் 8வதுவார்டு பாலாஜிநகரில் கழிவுநீர்வாய்க்கால்கள் முறையாக அமைக்கப்படவில்லை . இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி சாலையோரம் தேங்கி பெரும் சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தி வருவதோடு பல்வேறு தொற்றுநோய்களையும் பரப்பிவருகிறது இதுகுறித்து ஆண்டிபட்டி பேரூராட்சி நிர்வாகித்திடம் பலமுறை
புகார் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தால் கோபமடைந்த பொதுமக்கள் ஆண்டிபட்டி ஏத்தக்கோவில் சாலையில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர் . இதனால் ஆண்டிபட்டி ஏத்தக்கோவில் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது .
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES தேனி