மாவட்ட செய்திகள்
தஞ்சையில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம்.

தஞ்சையில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நேற்று தர்ணா போராட்டம் நடைபெற்றது.
தஞ்சை பனகல் கட்டிட வளாகத்திற்குள் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ராஜன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் ரமேஷ் தொடக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் கை. கோவிந்தராஜ், தஞ்சை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், அறிவானந்தம், திருவோணம் ஏ.பி.டி.ஓ. முரளி என்கிற முரளிதரன் மற்றும் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையாக உள்ள தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் மீது பழிவாங்கும் நோக்கத்துடன் கடந்த ஆட்சியாளர்கள் மேற்கொள்ளப்பட்ட தற்காலிக பணி நீக்க உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மேலும் அவரை உடனே பணி ஓய்வில் செல்ல உடனடியாக உரிய ஆணை வழங்க வேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நிலையிலிருந்து உதவி இயக்குனர் நிலையிலான பதவிஉயர்வு ஆணைகளை காலதாமதமின்றி வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதி திட்ட நிர்வாக நிதியினை காலதாமதமின்றி அனைத்து வட்டாரங்களிலும் வழங்க வேண்டும்.
உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
