மாவட்ட செய்திகள்
கிருஷ்ணகிரி அடுத்த காவேரிபட்டினம் அருகே இருச்சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இருச்சக்கர வாகனத்தில் சென்ற இருவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலி.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டினம் அடுத்த திம்மாபுரம் என்ற இடத்தில் இருச்சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இருச்சக்கர வாகனத்தில் சென்ற இருவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜகடை அருகே உள்ள எம்.சி.பள்ளி பகுதியை சேர்ந்த ராஜசேகர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த செந்தில் குமார் ஆகிய இருவரும் காவேரிபட்டினத்தில் உள்ள ஒரு தனியார் ஜீஸ் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை ராஜசேகர் மற்றும் செந்தில் குமார் ஆகிய இருவரும் வழக்கம்போல் வேலைக்கு செல்வதற்க்காக கிருஷ்ணகிரியில் இருந்து காவேரிபட்டினம் நோக்கி இருச்சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். திம்மாபுரம் என்னும் இடத்தில் இவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது பின்னால் வந்த லாரி மோதியதில் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் லாரியின் சக்கரத்தில் சிக்கி இருவரும் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பின்னர் விபத்து குறித்து தகவலறிந்து வந்த காவேரிப்பட்டினம் போலீசார் இருவரின் உடல்களையிம் மீட்டு பிரேத பரிசோதனைக்காக காவேரிபட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து லாரியின் ஓட்டுனரிடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்து நடைபெற்ற திம்மாபுரம் என்ற இடத்தில் மீன் கடைகள் அதிகமாக உள்ள காரணத்தினால் மீன் உண்பதற்காக நெடுஞ்சாலையின் ஓரமாகவே வாகனங்களை நிறுத்துவதால் அடிக்கடி நிறைய விபத்துக்கள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
