BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தஞ்சாவூர் சோழாஸ் ரோட்டரி சங்கம் சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு.

தஞ்சாவூர் சோழாஸ் ரோட்டரி சங்கம் சார்பில் கோடைகாலத்திற்கான தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
தஞ்சை ரயிலடி அருகில் அமைக்கப்பட்ட கோடைகாலத்திற்கான தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவரும், வழக்கறிஞருமான விவியன் அசோக் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தஞ்சை மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரா வருகை தந்து தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். ரோட்டரி சங்கத்தின் நீர் மேலாண்மை மற்றும் சுகாதாரம் மாவட்ட தலைவர் அன்புராஜ், ரோட்டரி சங்க மாவட்ட துணை ஆளுநர் பெலிக்ஸ் சுந்தர், முன்னாள் தலைவர் லாரன்ஸ், நிர்வாகிகள் ஜெயினுலாபுதீன், துணைவேந்தன், ரமேஷ் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை பொறுப்பாளர் சந்தனசாமி செய்திருந்தார். இதேபோல் கீழவாசல், பழைய மாரியம்மன் கோவில் ஆகிய இடங்களிலும் கோடை காலத்தில் தண்ணீர் தாகத்தை தீர்ப்பதற்கான தண்ணீர் பந்தல் திறக்கப்பட உள்ளது என்று ரோட்டரி சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இதில் மோர் குடிதண்ணீர் ஆகியவைகள் 24 மணி நேரமும் தண்ணீர் பந்தலில் வைக்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )