BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

மாணவர்களே தயாரா இருங்க. ஆகஸ்ட் 1 ந் தேதி முதல் நேரடி வகுப்புகள்.

மாணவர்களே தயாரா இருங்க. ஆகஸ்ட் 1 ந் தேதி முதல் நேரடி வகுப்புகள்..அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சில் உத்தரவு
இறுதிச்சுற்றுக் கலந்தாய்வினை ஜூலை 20 ந் தேதிக்குள் முடிக்க வேண்டும்.

மாணவர்கள் கல்லூரிகளில் ஜூலை 30 ந் தேதிக்கு முன்னதாக சேர்க்கப்பட வேண்டும். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஆகஸ்ட் 1 ந் தேதி துவக்கப்பட வேண்டும்.

 


பொறியியல் படிப்புகளுக்கு வரும் கல்வியாண்டில் ஆகஸ்ட் 1 ந் தேதி முதல் நேரடி வகுப்புகள் துவக்க அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் 2022-23 ம் கல்வியாண்டில் அட்டவணையையும், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் ஆகஸ்ட் 1 ந் தேதி முதல் வழக்கம் போல் துவக்கப்பட வேண்டும் என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகம் அறிவித்துள்ளது.மேலும் வரும் கல்வியாண்டிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் மற்றும் நேரடியாகவும் வகுப்புகளை நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்றின் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்விப் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கான கலந்தாய்வு, முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்கம் உள்ளிட்டவை காலதாமதமாகவே துவக்கப்பட்டன. ஆனால் வரும் கல்வியாண்டு முதல் மாணவர்களுக்கு குறிப்பிட்ட காலத்தில் வகுப்புகளை துவக்குவதற்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இது குறித்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான முதல்கட்டக் கலந்தாய்வு ஜூன் 30 ந் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும். அதனைத் தொடர்ந்து 2ம் கட்டக் கலந்தாய்வினை ஜூலை 10 ந் தேதிக்குள் முடிக்க வேண்டும்.

இறுதிச்சுற்றுக் கலந்தாய்வினை ஜூலை 20 ந் தேதிக்குள் முடிக்க வேண்டும். மாணவர்கள் கல்லூரிகளில் ஜூலை 30 ந் தேதிக்கு முன்னதாக சேர்க்கப்பட வேண்டும். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஆகஸ்ட் 1 ந் தேதி துவக்கப்பட வேண்டும்.மேலும் கல்லூரிகளில் காலியாக இடங்கள் இருந்தால் அவற்றில் மாணவர்களை ஆகஸ்ட் 15 ந் தேதி வரையில் மட்டுமே சேர்க்கலாம். அதன் பின்னர் மாணவர்களை சேர்க்கக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆன்லைன் வழியிலான கல்வி அனைத்து படிப்புகளுக்கும் வழங்கப்பட்டன. தற்போது தொற்று குறைந்திருந்தாலும், முழுமையாக குறையாத ஒரு சூழலில் வரும் கல்வி ஆண்டிலும் ஆன்-லைன் வழிக் கல்விக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.மேலும் முறையான அனுமதி பெறாமல் மாணவர்களை சேர்க்கும் கல்வி நிறுவனங்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை செய்துள்ளது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )