மாவட்ட செய்திகள்
விவசாயிகளுக்கு 2மடங்கு மகசூல், 3மடங்கு வருமானம் கிடைப்பதற்கு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து தருகிறோம்.
விவசாயிகளுக்கு 2மடங்கு மகசூல், 3மடங்கு வருமானம் கிடைப்பதற்கு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து தருகிறோம் – திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு பேச்சு.
திருச்சி மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலம் தஞ்சாவூர்,திருவாரூர், நாகபட்டினம் , மயிலாடுதுறை , பெரம்பலுார்,அரியலுார் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் பங்கு பெற்ற மண்டல அளவிலான வர்த்தக தொடர்பு பணிமனை கண்காட்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்தார்.
இந்த பணிமனையில் உழவர்கள் இயற்கை முறையில் விவசாயம் செய்து உற்பத்தி செய்த கம்பு, கேழ்வரகு, திணை. வரகரிசி உள்ளிட்ட திணை வகைகள் கடலை உள்ளிட்டவற்றில் இருந்து தயாரிக்கப்பட்ட என்னை, உணவு பொருட்கள் மற்றும் வாழையில் இருந்து தயாரிக்கப்பட்ட மதிப்புக்கூட்டு பொருட்கள் முளைகட்டிய சிறுதானிய வகைகள் உள்ளிட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு பேசுகையில்,
தமிழ்நாடு நீர்பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டம் 2019-20ம் ஆண்டு முதல் திருச்சி மாவட்டத்தில்
4உபவடிநீர் பகுதிகளில்
9.68கோடி திட்ட மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இத்திட்டத்தின் மூலம் உழவர் உற்பத்தியாளர் குழுக்களை உருவாக்கி அவற்றை உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களாக ஒருங்கிணைத்து திருச்சி மாவட்டத்தில் நான்கு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் துவங்கப்பட்டுள்ளது.
இரண்டு மடங்கு மகசூல் மூன்று மடங்கு வருமானம் விவசாயிகள் பெறுவதற்கு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு அனைத்து தொழில் நுட்ப உதவி மற்றும் தேவையான நிதி உதவிகளும் வழங்கப்படுகிறது என்றார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.