BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

இலங்கைத் தமிழர்களுக்கு விரைவில் விடிவுகாலம்: முதல்வர் உறுதி.

இலங்கைத் தமிழர்களுக்கு விரைவில் விடிவுகாலம்: முதல்வர் உறுதி

“இலங்கையிலிருந்து தமிழகம் வரும் தமிழர்களுக்கு தமிழக அரசு விரைவில் விடிவுகாலம் ஏற்படுத்தி தரும்” என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.

போரினால் தவித்து வந்த இலங்கைத் தமிழர்கள் தற்போது, பொருளாதார நெருக்கடியில் சிச்கி தவித்து வருகிறார்கள். இதுவரை இல்லாத அளவு இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ராஜபக்சே ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட்டங்களும் வெடித்துள்ளன. இதனால், மக்கள் அன்றாட வாழ்க்கை நடத்தவே சிரமப்பட்டு வருகின்றனர். இதனால், தொப்புள்கொடி உறவான இலங்கைத் தமிழர்கள் தமிழ்நாட்டை நோக்கி வருகின்றனர். அவர்களுக்கு தமிழக அரசு அடைக்கலம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இந்நிலையில், சட்டப்பேரவையில் இது தொடர்பாக பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “இலங்கைத் தமிழர்கள் இன்றைக்கு பல துன்பங்களுக்கு, தொல்லைகளுக்கு ஆளாகியிருக்கக்கூடிய சூழ்நிலையில், அங்கு பரிதவித்துக் கொண்டிருக்கிற தமிழர்கள் அண்மையில் தமிழ்நாட்டிற்கு வந்துக் கொண்டிருக்கிற செய்திகளையெல்லாம் நானும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

அது குறித்து நேற்றைய தினமே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இது தொடர்பாக மத்திய ஒன்றிய அரசிடமும், அங்கிருக்கிற அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களிடம் தொடர்பு கொண்டு இதை எப்படி கையாள வேண்டும் என்ற சட்டரீதியாக நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம். விரைவில் அவர்களுக்கு ஒரு விடிவுகாலத்தை தமிழக அரசு நிச்சயமாக ஏற்படுத்தி தரும் என்ற நம்பிக்கையை நான் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )