BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு காசநோய் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் மற்றும் காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சனி அவர்கள் இன்று தொடங்கி வைத்து தகவல்.

 

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் தருமபுரி மாவட்ட காசநோய் பிரிவின் சார்பில் காசநோய் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, விழிப்புணர்வு கையெழுத்துg இயக்கம் மற்றும் காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி,


அவர்கள் தலைமையேற்று காசநோய் ஒழிப்பு உறுதிமொழியான “காசநோயை அறவே ஒழித்து, காசநோய் இல்லா உலகை உருவாக்க, இந்தியக் குடிமகனாகிய நான் பாடுபடுவேன் என்று உளமாற உறுதியளிக்கிறேன். என் குடும்பம் மற்றும் என் ஊரில் யாருக்காவது காசநோயின் ஆரம்ப அறிகுறிகளான இரண்டு வாரங்களுக்கு மேல் இருமல், மாலை நேரக் காய்ச்சல், பசியின்மை, எடை குறைதல், சளியில் இரத்தம் வருதல் ஆகியவை தென்பட்டால் அவர்களுக்கு காசநோய் பற்றி எடுத்துச் சொல்லி மருத்துவரிடம் அழைத்துச் செல்வேன் என்று உறுதியளிக்கிறேன். மற்ற நோயைப் போல காசநோயும் கிருமியால் வரக்கூடிய ஒரு நோய் தான் என்பதால், காசநோயாளிகளை துச்சமாக எண்ண விட மாட்டேன், மற்றவர்களையும் எண்ண விட மாட்டேன் என்று உறுதியளிக்கிறேன். காசநோயாளிகளை ஒதுக்கிவைக்காமல், அன்புடன் அரவணைத்து, ஆறுதல் அளிப்பேன் என்றும் உறுதியளிக்கிறேன். காசநோய் ஒழிப்பில் என்னால் இயன்ற அனைத்து அணுகு முறைகளையும் மேற்கொண்டு, காசநோயை முற்றிலும் ஒழித்திடவும்,

“காசநோய் இல்லா தமிழகம்-2025” என்ற இலக்கினை அடையவும் பாடுபடுவேன் என உறுதி கூறுகிறேன்”

என்ற உறுதி மொழியினை வாசிக்க மருத்துவத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் ஸ்ரீவிஜய் வித்யாலயா நர்சிங் கல்லூரி மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட அனைவரும் பின்தொடர்ந்து வாசித்து உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் தச.திவ்யதர்சினி, காசநோய் ஒழிப்பு குறித்த மாபெரும் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை கையொப்பமிட்டு தொடங்கி வைத்து, காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.

இப்பேரணியில் மருத்துவத்துறை பணியாளர்கள் மற்றும் தருமபுரி ஸ்ரீவிஜய் வித்யாலயா நர்சிங் கல்லூரி மாணவ, மாணவியர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.இப்பேரணியானது தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கி சேலம்-தருமபுரி சாலை வழியாக பாரதிபுரம் வரை சென்றடைந்தது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )