மாவட்ட செய்திகள்
500 ஆண்டுகளுக்குமேல் பழமையான தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியில் அமைந்துள்ளது பகவதி அம்மன் கோவில் திருவிழா.
தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியில் அமைந்துள்ளது பகவதி அம்மன் கோவில். 500 ஆண்டுகளுக்குமேல் பழமையான இந்த கோவிலின் மாசி மாதம் நடைபெறும் திருவிழாவின் போது தேனி மாவட்டம் மட்டுமின்றி திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பகவதி அம்மனின் திருவிழாவில் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
மூன்று நாள் நடக்கும் இந்த திருவிழாவில் மூன்றாம் நாளான நேற்று மாலை 4 மணி முதல் சிலம்பாட்டம் பயிற்சி பெற்ற சிறுவர்கள் 15 பேர் ஒன்றாக இணைந்து தவில் வாத்திய இசைக்கு ஏற்றவாறு நடனமாடி சிலம்பத்தை சுற்றி பெரியகுளம் வடகரையின் முக்கிய வீதிகளில் 5 மணிநேரம் ஆடியவாறு வலம் வந்து பகவதி அம்மன் கோவிலில் சிலம்பாட்ட சிறுவர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஆடியவாறு சிலம்பாட்டத்தைக் சுற்றிய சிறுவர்களை கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து கண்டு ரசித்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.