BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட கும்பலின் தலைவன் உட்பட இரண்டு பேர் கைது – 22 கிலோ கஞ்சா உட்பட கார் பறிமுதல்..!!

திருச்சி போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு ஆந்திராவிலிருந்து
TN AM 74-5159 பதிவு எண் கொண்ட காரில் கஞ்சா கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில்
காவல் துணை கண்காணிப்பாளர் பரத்சீனிவாசன், காவல் ஆய்வாளர் ரமேஷ் காவலர்களுடன் திருச்சி மாவட்டம், சமயபுரம் அடுத்துள்ள டோல் பிளாசா அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த ரகசிய தகவல் எண் கொண்ட அந்த காரை சுற்றி வளைத்து பிடித்தனர். அதில் வந்த 2நபர்களையும் அவர்கள் கொண்டுவந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். பின்னர் நடைபெற்ற விசாரணையில்
தேனி மாவட்டம், தேவாரம் பகுதியை சேர்ந்த ஆசை (34) மற்றும் புவனேஸ்வரன்(32) என தெரியவந்தது. மேலும் இவர்கள்
ஆந்திராவிலிருந்து வெள்ளை நிற உரப்பையில் கடத்தி வந்த 22கிலோ எடையுள்ள கஞ்சாவையும் மற்றும் காரையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

பின்னர் அவர்கள் இருவரும் திருச்சி குற்றவியல் நீதிமன்றம் நீதிபதி கார்த்திக்ஆசாத் (பொறுப்பு) முன் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஆசை என்பவன் கும்பலின் தலைவன் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )