BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

`ஊதியம் பிடித்தம், ஒழுங்கு நடவடிக்கை, லீவு கிடையாது’

`ஊதியம் பிடித்தம், ஒழுங்கு நடவடிக்கை, லீவு கிடையாது'

வரும் 28, 29 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் பிடிக்கப்படும் என்றும் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஊழியர்களுக்கு போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குதலை கைவிடுதல், தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிடுதல் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 28, 29 ஆகிய நாட்களில் அகில இந்திய பொது வேலை நிறுத்தப்போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்துக்கு தமிழகத்தில் சில தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில், மதுரை போக்குவரத்து கழகம் ஊழியர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படுவதோடு, ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளது.

வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது பொதுமக்களுக்கு பாதகம் ஏற்படுத்தக் கூடிய செயலாகும் என்றும் பணிக்கு வருகை தரவில்லை எனில் ‘ஆப்செண்ட்’ மார்க் செய்யப்பட்டு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்றும் ஊழியர்கள் விடுமுறை எடுக்க அனுமதி கிடையாது என்றும் ஏற்கெனவே அளிக்கப்பட்ட விடுப்புகளும் ரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )