மாவட்ட செய்திகள்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்து நல்ல லாபம் ஈட்டி பொதுமக்கள் மகிழ்ச்சி.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்து நல்ல லாபம் ஈட்டி வந்தனர் தற்பொழுது வரத்து அதிகமாக இருக்கும் காரணத்தாலும் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது .

ஒரு வகையில் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் அதிக அளவில் முதலீடு செய்து சாகுபடி செய்த விவசாயிகள் மிகவும் வேதனையில் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் சரியான விலை கிடைக்காததால் விளைந்த தக்காளி பழங்களை சாலையோரம் போட்டுச் செல்கின்றனர்.

சிலர் அறுவடை செய்யாமல் தங்கள் விவசாய நிலங்களில் தக்காளிகளை செடிகளுடன் டிராக்டர்களை கொண்டு உலவு செய்கின்றனர் இதனால் விவசாய நிலங்களுக்கு உரமாக தக்காளிப் பழங்கள் பயன்படுகிறது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
