மாவட்ட செய்திகள்
திருப்பூரில் அடிப்படை பிரச்சனைகள் சரி செய்து தர வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட கல்லாங்காடு பகுதியில் சில நாட்களாக சாக்கடை தூர்வாரததால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் சாலை வசதியை செய்து தர வலியுறுத்தியும் பலமுறை மனு அளித்தும் மாநகராட்சி நிர்வாகம் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என குற்றம்சாட்டி அப்பகுதி பொதுமக்கள் கல்லாங்காடு மெயின் ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்களை சமரசம் செய்ததையடுத்து மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.