BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

திருப்பூரில் உள்ள ஏராளமான பின்னலாடை நிறுவனங்கள் மூலம் காலத்துக்கேற்ப பின்னலாடைகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கோடைகாலம் குளிர்காலம் இலையுதிர்காலம் உள்ளிட்ட காலங்களுக்கு ஏற்ப பின்னலாடை உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படும் நிலையில் தற்போது இந்தியாவில் பலராலும் எதிர்பார்க்கப்பட்ட வரும் ஐபிஎல் சீசன் கிரிக்கெட் போட்டிகள் துவங்கி நடைபெற உள்ளன.ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் அணிகின்ற டி-சர்டுகள் மாடல்களில் திருப்பூரில் டி-சர்டுகள் தயாரிக்கப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்படும். அந்தந்த மாநிலங்களில் உள்ள மொத்த வியாபாரிகளும் அதனை வாங்கி தங்களது மாநிலங்களில் விற்பனை செய்வார்கள்.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் இருந்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாகவே திருப்பூருக்கு ஆர்டர்கள் வர தொடங்கியது. ஆடை தயாரிப்பாளர்களும் உற்சாகமாக ஐ.பி.எல். டி-சர்டுகளை தயார் செய்தனர். தற்போது இந்த டி-சர்ட்டுகள் விற்பனையும் மும்முரமாக நடைபெற தொடங்கியுள்ளது. வருகிற வாரங்களில் மேலும் டி-சர்டுகள் விற்பனை அதிகரிக்கும் என ஆடை தயாரிப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா உள்ளிட்ட பாதிப்பின் காரணமாக ஐ.பி.எல். டி-சர்ட்டு விற்பனை சரிவை சந்தித்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரசிகர்களும் உற்சாகமாக டி-சர்ட்டுகளை வாங்கி அணிந்து வருகிறார்கள்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )