தலைப்பு செய்திகள்
உறையூர் காட்டன் சேலைக்கு புவிசார் குறியீடு கேட்டு பதிவு சென்னை உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞர் தகவல்.!
தஞ்சாவூர் உறையூர் காட்டன் சேலைக்கு புவிசார் குறியீடு கேட்டு பதிவு செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞரும், அறிவுசார் சொத்துரிமைக் கழக வழக்கறிஞருமான ப.சஞ்சய்காந்தி தெரிவித்தார். தஞ்சாவூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் பல்வேறு பாரம்பரிய பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, சோழர்களின் தலைநகரமாக திகழ்ந்த திருச்சி அருகே உள்ள உறையூரில் சுதந்திரத்துக்கு முன்பாக, இரண்டாம் உலகப்போர் சமயத்தில் இப்பகுதியில் உள்ள நெசவாளர்கள் காயத்துக்கு கட்டு போட துணி நெய்துள்ளனர். இந்த துணியானது காட்டனில் வெள்ளை ரகத்தில் துப்பட்டா, அங்கவல்திரம் போன்றவற்றை நெய்துள்ளனர். பின்னர் 8 முழம் வேட்டி ரகங்களும், அதனைத் தொடர்ந்து காட்டன் சேலை தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து 1936-ம் ஆண்டு இந்த தொழில் ஈடுபட்ட தேவாங்க குல நெசவாளர்கள், உறையூர் தேவாங்க கைத்தறி நெசவு கூட்டறவு சங்கத்தை துவங்கி, அதில் சேலை, வேட்டி போன்றவற்றை தயாரித்துள்ளனர். இந்த கூட்டுறவு சங்கம் தற்போதும் பாரம்பரியமிக்க உறையூர் சேலைகளை தயாரித்து வருகிறது.
உறையூர் நெசவாளர்களால் தற்போது காலமாறுதலுக்கேற்ப சில நவீனங்களை புகுத்தி காட்டன் சேலைகளை வடிமைத்து தயாரித்து வருகின்றனர். இந்த சேலைகள் கோ-ஆப்டெக்ஸ் மூலம் தமிழகம் முழுவதும் மற்றும் தங்களது பகுதியிலேயே உள்ள கூட்டுறவு சங்கம் மூலம் சில்லறை விற்பனையிலும் விற்பனை செய்து ஈடுபட்டு வருகின்றனர்.
இப்படி பழம்பெருமை வாய்ந்த உறையூர் காட்டன் சேலைகளுக்கு சிறப்பு அங்கீகாரம் பெறும் வகையில், திருச்சி மாவட்டத்தில் உறையூர் காட்டன் சேலைகள் தயாரிக்கும் ஐந்து கூட்டுறவு சங்கங்களின் சார்பில், கடந்த 25-ம் தேதி புவிசார் குறியீடு கேட்டு, புவிசார் குறியீடு பதிவகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான சான்றிதழ் விரைவில் கிடைக்கும். தற்போது வரை திருபுவனம் பட்டு, கோடாலி கருப்பூர் சேலைகள் உள்ளிட்ட தமிழகத்தில் 10 கைத்தறி ரகங்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது என்றார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.